Pages

Thursday, 16 June 2011

நான் வெள்ளை புடவை உடுத்திக்கொண்டுதான் மணமேடையில் அமருவேன்!!!

நோபல் பரிசுக்கு இணையாக ஸ்வீடன் நாட்டில் வழங்கப்படும் "வாழும் கலைஞருக்கான" விருதினை பெற்ற அன்னை கிருஷ்ணம்மாள் ஜெகநாதனை பற்றி தெரிந்துகொள்வோமா!! என் அம்மா கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் இன்று இருக்கும் பெண்களுக்கு எல்லாம் ஒரு உதாரணம். ஆம். தன் அன்பான துணைவரை வாழ்க்கை துணையாக கரம்பிடிக்க 'நான் எந்த நகைகளையும் போடாமல், வெள்ளை நிற ஆடை உடுத்திக்கொண்டுதான் தங்களை கரம்ப்பிடிப்பேன், தாலி கட்டிக்கொள்ள மாட்டேன். பட்டுபுடவை உடுத்தமாட்டேன். உங்களுக்கு நான் நல்ல துணையாகவும் பிள்ளைகளுக்கு நல்ல தாயாகவும் இருப்பேன் அதேப்போன்று அடிப்படை உரிமையே இல்லாமல் அடிமைப்பட்டு இருக்கும், சுதந்திர விடியலுக்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கும் எம் மக்களுக்காக சமூக போராளியாகவும் இருப்பேன் இதில் எந்த தடையும் எனக்கும் உங்களுக்கும் இல்லை என்றால் நான் உங்களை கரம் பிடிக்க தயார், உங்கள் முடிவை யோசித்து சொல்லுங்கள்" என்றார். இந்த துணிச்சல் இன்றைய பெண்களுக்கு எப்பொழுது வரும். அம்மா சொன்னது மட்டும் இல்லை இன்றளவும் அவருடைய கொள்கைகளில் இருந்து ஒரு துளி அளவுக்கூட பின் வாங்கவில்லை. அவர் நகைகளுக்கும், பட்டு பீதம்பரத்துக்கும் அடிப்பணியவில்லை. தன் சமூக விடுதலைக்காக தான் கொண்ட லட்சியத்தில் இருந்து இம்மியளவுக்கூட விலகவில்லை. இன்றளவும் பருத்தி புடவையைதான் கட்டிக்கொண்டு மக்களோடு மக்களாக வாழ்கிறார். கீழ்வெண்மணியில் நடந்த நிகழ்வை நேரில் கண்ட வலியை இன்றளவும் தன் நெஞ்சில் ஆறாத காயமாக இருக்கிறது என்று